ஞாயிறு, 31 ஜனவரி, 2016

பிரதமர் மோடியின் மாயாஜாலதிற்கு ஈடு எவர்

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தேர்ந்த குள்ள நரித்தம் பழகிய அரசியல்வாதி ஆக மாறி  விட்டார்.  அவரது தோல்விகள் மற்றும் தவறான கணிப்புகள் ஒரு நேர்மறையான சுழலுக்கு வித்திடும் பொழுது, ஒரு புதிய கொள்கை, பேச்சு, அல்லது முழக்கம் வெளியிட்டு, தன்னுடைய ஆட்சியின் மீது மக்களுக்கு எழும் ஐயம், கோபம், வெறுப்பு இவைகளை திசை திருப்பி விடுகிறார்.

செப் 2014-ல் அறிவித்த "மேக்-இன்-இந்தியா" அதாவது "இந்தியாவில் உற்பத்தி" என்ற திட்டம் ஒன்றிற்கும் உதவவில்லை என்று புரிய ஆரம்பித்தவுடன், ஜனவரி 2016 ல்  நயமாக "ஸ்டார்ட்-அப்-இந்தியா, ஸ்டாண்ட்-அப்-இந்தியா" அதாவது "தொடங்கிடு இந்தியா, எழுந்திடு இந்தியா", என்று ஒரு புதிய கோஷம் முழக்கி விட்டார்.

நேற்று முன்தினம் (29 ஜனவரி 2016) மேலும் கவனத்தை திசை திருப்புவதற்காக 10 செயலர் பதிவியில் உள்ள உயர் அதிகாரிகளை "பெர்பார்ம்-ஆர்-பெரிஷ்", அதாவது "செயல்படு-அல்லது-சென்றுவிடு" என்று ஒரு வெத்துவேட்டு கோட்பாட்டின் கீழ் இடமாற்றம் செய்தார்.

ஒரு வழிப்போக்கர்  "இந்திய மக்களுக்கு அதிர்ஷ்டம் நிறைய உள்ளது" என்று சமீபத்தில் புன்னகையுடன் கூறினார். 

"கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $ 120 வரை எகிறிய போது, அதை சமாளிக்க மன்மோகன் சிங் அரசு இருந்தது. இப்போது அதே பீப்பாய் $40 கீழே விழுந்து விட்டது.  இந்நேரம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு சுமார் $ 100 மேல் இருந்திருந்தால் இந்த கையாலாகாத மோடியும், ஜெட்லியும் மக்களை என்ன பாடு படுத்தி இருப்பார்கள்?" என்று கிண்டலடித்தார்.

பின்னர் அவர் "பிரதமர்  மோடிக்கு மூன்று விஷயங்கள் நன்றாக தெரிகிறது - ட்வீட்ஸ், செல்பீஸ், ஸ்லோகன்ஸ்" என்றார். 

இது எனக்கு இந்த கார்ட்டூன் வரைய ஐடியா கொடுத்தது.

லக்கி லூக் - தனது நிழலை விட வேகமாக சுடுவான்; நரேந்திர மோடி - தனது செல்பீஐ விட வேகமாக ட்வீட் செய்வார்.


குடியரசு தின 2016 டூடுல்

 26 ஜனவரி 2016 இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினம் கூகிள் டூடுல், ஒட்டகங்கள்.  ஒட்டக கான்டின்ஜென்ட் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று முன்னர் செய்திகள் கசிந்தாலும், வழக்கம் போல் மோடி ஒரு U - திருப்பம் அடித்து விட்டார் போலும், 66 ஆண்டு பாரம்பரியம் நிறுத்தபடாமல் தொடர்ந்தது.

இந்திய இராணுவ ஒட்டக கார்ப்ஸ் 1950 முதல் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று  வந்துள்ளது.  ஆனால் இந்திய இராணுவ ஒட்டக கார்ப்ஸ்  1975 ல் கலைக்கப்பட்டது, மற்றும் ஒட்டக துருப்புகளை எல்லைப் பாதுகாப்பு படை தன்னுள் கிரகித்துக் கொண்டது.  1976 ஆம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்பு படை ஒட்டக கார்ப்ஸ்  இந்த அணிவகுப்பில் பங்கேற்கிறது.

இதோ குடியரசு தின 2016 க்கான டூடுல். சரித்திரம்